NEWS NEWS Author
Title: அருமையான இன்ஸ்டன்ட் புடலங்காய் பச்சடி இப்படி செஞ்சி பாருங்க உங்களையும் சமையல் கில்லடின்னு எல்லாரும் பாரட்டுவாங்க!
Author: NEWS
Rating 5 of 5 Des:
  இன்ஸ்டன்ட் ஆக வீட்டில் செய்யக் கூடிய இந்த புடலங்காய் பச்சடி ரெசிபி செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது. புடலங்காய் நீர் சேர்த்துள்ள காய்கறி என...

 

இன்ஸ்டன்ட் ஆக வீட்டில் செய்யக் கூடிய இந்த புடலங்காய் பச்சடி ரெசிபி செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது. புடலங்காய் நீர் சேர்த்துள்ள காய்கறி என்பதால் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இந்த பச்சடி செய்வதற்கு எதையும் அரைக்க வேண்டாம், அப்படியே வேக வைத்து தாளிச்சு கொட்டிடலாம். எல்லா வகையான காரசாரமான சாப்பாட்டிற்கும் அருமையான காம்பினேஷன் ஆக இருக்கக்கூடிய இந்த இன்ஸ்டன்ட் புடலங்காய் பச்சடி ரெசிபி எப்படி செய்வது? என்பதைத்தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம். இன்ஸ்டன்ட் புடலங்காய் பச்சடி செய்ய தேவையான பொருட்கள்: புடலங்காய் – 1, வேகவைத்த கடலை பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, கெட்டி தயிர் – அரை கப், சமையல் எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், கடலை பருப்பு – அரை டீஸ்பூன், சீரகம் – கால் ஸ்பூன், வர மிளகாய் – 2, கருவேப்பிலை – ஒரு கொத்து, உப்பு – தேவையான அளவு. - Advertisement - Video Player is loading. Pause Unmute Loaded: 5.81% Remaining Time -11:25 Close Player இன்ஸ்டன்ட் புடலங்காய் பச்சடி செய்முறை விளக்கம் (Instant pudalangai pachadi recipe in Tamil): இந்த புடலங்காய் பச்சடி செய்வதற்கு முதலில் ஒரு புடலங்காயை எடுத்து அதன் மேல் தோலை சீவி உள்ளிருக்கும் விதைகளை எல்லாம் எடுத்து விட்டு நன்கு சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பொடியாக நறுக்கி வைத்துள்ள இந்த புடலங்காயை ஐந்து நிமிடம் தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல ரெண்டு ஸ்பூன் கடலைப்பருப்பை சுத்தம் செய்து ஒரு 10 நிமிடம் ஊற வைத்து நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். வேகவைத்த இவற்றுடன் இப்பொழுது ஒரு தாளிப்பு கொடுக்க வேண்டும். 

 அடுப்பை பற்ற வைத்ததில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் சீரகம் சேர்த்து, 2 மிளகாயை கிள்ளி போட்டு, ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி போட்டு தாளிக்க வேண்டும். பின்னர் மீடியம் சைஸ் பெரிய வெங்காயத்தை தோலுரித்து பொடி பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் சுருள வதங்கி வரும் பொழுது அடுப்பை அணைத்து விடுங்கள். புடலங்காய், கடலை பருப்பு கலவையுடன் இந்த வெங்காய தாளிப்பையும் சேர்த்து அரை கப் கெட்டியான தயிர் ஊற்றி, தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதையும் படிக்கலாமே: ஆயில், முட்டை எதுவுமே இல்லாமல் ஹெல்தியான மையோனைஸ் வீட்டிலேயே செய்வது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா? இந்த ரெசிபி தெரிஞ்சா பயமே இல்லாம மயோனிஸ் எவ்வளவு வேணும்னாலும் சாப்பிடலாம். ஒரு பத்து நிமிடம் நன்கு தயிரில் இவை ஊறியதும் சூப்பரான டேஸ்டியான புடலங்காய் பச்சடி இன்ஸ்டன்ட் ஆக தயார்! இந்த பச்சடி செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது. காரக்குழம்பு, சாம்பார், ரசம் போன்றவற்றுக்கு தொட்டுக்க சூப்பராக இருக்கக்கூடிய இந்த ஒரு அருமையான புடலங்காய் பச்சடி ரெசிபியை நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க!

Advertisement

 
Top