சீஸ் செய்வோம் அல்லவா அதே போல் தான் தண்ணீர் நமக்கு தேவைப்படாது. மேலே இருக்கும் கட்டியான அந்த பாலை எடுத்து ஆறவைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பட்டர் 1 டேபிள்ஸ்பூன், உப்பு 1/2 ஸ்பூன், சர்க்கரை 1 ஸ்பூன், பால் 1/4 கப் அளவு ஊற்றி இரண்டு ஓட்டு ஓட்டினால் கொழ கொழப்பாக சூப்பரான மயோனைஸ் தயார். (தேவைப்பட்டால் இதோடு பூண்டு பல் 2, மிளகு ஐந்தில் இருந்து ஆறு போட்டு அரைத்தாலும் இதனுடைய சுவை கொஞ்சம் கூடுதலாக கிடைக்கும்.) ஒரு பிரட்டை எடுத்து அதன் மேலே இந்த மையோசை அப்ளை செய்து அதற்கு மேல் வெங்காயம் வெள்ளரிக்காய் தக்காளி உங்களுக்கு விருப்பப்பட்ட காய்கறிகளை வைத்து அதன் மேலே சீஸ் துருவி சில்லி பிளக்ஸ் போட்டு மேலே இன்னொரு மயோனைஸ் தடவிய பிரட் வைத்து ரோஸ்ட் செய்ய வேண்டும். கடாயில் கொஞ்சம் வெண்ணெய் ஊற்றி இந்த பிரட்டை வைத்து இரண்டு பக்கமும் ரோஸ்ட் செய்து அழகாக கட் பண்ணி பரிமாறி பாருங்கள். சுவையான டேஸ்ட்டில் ஒரு மயோனைஸ் பிரட் சாண்ட்விச் தயார். - Advertisement - தயார் செய்த இந்த மையோனிஸை ஒரு காற்று போகாத பாட்டிலில் போட்டு அப்படியே பிரிட்ஜில் வையுங்கள். 2 நாட்களுக்கு மட்டும் நன்றாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மயோனைஸ் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்துக்கு பிரச்சினை வரும் என்ற கவலை இனி இல்லை. இதையும் படிக்கலாமே: தேங்காய் புளி துவையலை, இவ்வளவு சுவையாக யாராலும் செய்ய முடியாது. சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட இது செம காம்பினேஷன். உங்கள் கையாலேயே அரை லிட்டர் பாலை வாங்கி இப்படி ஒரு ரெசிபி ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை விருப்பமாக சாப்பிடுவார்கள். ரெசிபி பிடித்தவர்கள் முயற்சி செய்து பார்க்கவும்.