இப்போது அடுப்பில் ஒரு கடாய் சூடானதும் சுத்தம் செய்த அரிசியையும் துவரம் பருப்பையும் ஒன்றாக சேர்த்து அடுப்பை மிதமான தீக்கு மாற்றிய பிறகு நிறம் மாறாமல் ஈரம் மட்டும் காயும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். அதே போல் அரை ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் சீரகம் இதையும் வறுத்து பிறகு அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து ரவை பதத்திற்கு உடைத்து கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் அதே கடாய் வைத்து நான்கு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் சூடான பிறகு ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து பொரிந்த பிறகு ஒரு ஸ்பூன் கடலைப் பருப்பு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 10 முந்திரிப் பருப்பு இவையெல்லாம் சேர்த்து நிறம் மாறியவுடன் ஐந்து காய்ந்த மிளகாய் கிள்ளி சேர்த்துக் கொள்ளுங்கள். -
இவையெல்லாம் நன்றாக பொரிந்த பிறகு ஒரு சிறிய துண்டு இஞ்சி துருவி சேர்த்து இத்துடன் கால் டீஸ்பூன் பெருங்காயமும் சேர்த்த பிறகு ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்து வெங்காயம் சிவந்து வரும் வரை வதக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு கப் அரிசிக்கு மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். ஒரு வேளை உங்களுக்கு இந்த உப்புமா குழைந்து வரவேண்டும் என நினைத்தால் மூன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம். தண்ணீர் ஊற்றிய பிறகு அரை ஸ்பூன் உப்பையும் சேர்த்து இந்த தண்ணீர் கொதிக்க விடுங்கள். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் அடுப்பை மிதமான தீக்கு மாற்றிய பிறகு நாம் ஏற்கனவே பொடித்து வைத்த அரிசி, பருப்பை இதில் சேர்த்து ஒரு முறை கட்டிகள் இல்லாமல் கலந்த பிறகு மூடி போட்டு மூன்று நிமிடம் வரை வேக விடுங்கள். இந்த சமயத்திலே அரிசி நன்றாக வெந்து விடும். அதன் பிறகு மூடியை எடுத்து விட்டு இரண்டு நிமிடம் வரை நீங்கள் கைவிடாமல் கலந்து விட்டால் அரிசி உப்புமா உதறி உதரியாக நல்ல மணத்துடன் சுவையாக தயாராகி விடும். இதை இறக்கும் போது கொஞ்சமாக கொத்தமல்லி தழைகளை மேலே தூவி இறக்கி விடுங்கள். இதையும் படிக்கலாமே: தக்காளியே போடாமல் சுவையாக சாம்பார் வைக்க இதோ ஒரு புத்தம் புது ரெசிபி. தக்காளி விலையை பற்றி இனி நமக்கு கவலையே இல்லை. இந்த உப்புமாவுக்கு சாம்பார் சட்னி போன்ற எந்த சைடு டிஷ் இருந்தாலும் பிரமாதமாக இருக்கும். எதுவுமே இல்லை என்றாலும் வெறும் உப்புமாவை சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும். நீங்களும் இப்படி ஒரு முறை இந்த உப்புமாவை ட்ரை பண்ணி பாருங்க.