அதற்கு 1 மீடியம் சைஸ் வெங்காயத்தை பொடியாக அல்லது நீளவாக்கில் உங்கள் விருப்பம் போல நறுக்கி கொள்ளுங்கள். அதை போல் 2 பச்சை மிளகாய் 1 துண்டு இஞ்சி ஒரு கொத்து கொத்தமல்லி இவை அனைத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இத்துடன் தேங்காய் துருவி 1/4 கப் அளவு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் கடாய் வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் 1ஸ்பூன் கடுகு சேர்த்து பொரிய விடுங்கள். அதன் பிறகு 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 ஸ்பூன் கடலைப்பருப்பு சேர்த்து சிவந்தவுடன் நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி இத்துடன் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி கொள்ளுங்கள். கடைசியாக துருவிய தேங்காய் நறுக்கி வைத்த கொத்தமல்லியை சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு நன்றாக கலந்து விடுங்கள். தேங்காயும், கொத்தமல்லியும் கடாயில் இருக்கும் சூட்டிலே லேசாக வதங்கினாலே போதும்.
இப்போது வதக்கிய வெங்காயத்தை ஏற்கனவே கரைத்து வைத்த மாவில் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து விடுங்கள். மாவு கெட்டியாக இருந்தால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி 2 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து மீண்டும் ஒரு முறை கலந்து கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் தோசை கல் வைத்து சூடானவுடன் கரைத்து வைத்திருக்கும் மாவை எடுத்து அடை மாவு போல ஊற்றிக் கொள்ளுங்கள். இதை மீடியம் ஃபிளேமில் ஒரு புறம் நன்றாக வேக விட்டு சிவந்ததும் மறுபுறம் திருப்பி போடுங்கள். இதற்கு எண்ணெய் அல்லது நெய் இரண்டில் எது வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். இதையும் படிக்கலாமே: தக்காளி இல்லாமல் 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா போதும் தோசை, சப்பாத்திக்கு டேஸ்டியான சைட் டிஷ் ரெடி! இரவு டின்னருக்கு நல்ல ஒரு அருமையான டிபன் ஆக இது இருக்கும் அதிக செலவில்லாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிகவும் சுலபமாக அதே நேரத்தில் சுவையான ஒரு உணவு தான் இந்த கோதுமை தோசை. இந்த ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.